Pages

Thursday, April 24, 2014

தயார்! : சேலம் மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும்... : 26.73 லட்சம் பேர் ஓட்டளிக்க, 2,993 சாவடிகள் அமைப்பு

தயார்! : சேலம் மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும்... : 26.73 லட்சம் பேர் ஓட்டளிக்க, 2,993 சாவடிகள் அமைப்பு
Advertisement
 
 




Advertisement

பதிவு செய்த நாள்

24 ஏப்
2014
02:07
சேலம்: ""இன்று நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கான, அனைத்து ஏற்பாடுகளையும், சேலம் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. 26.73 லட்சம் பேர் ஓட்டளிக்க, 2,993 ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. காலை, 7 மணிக்கு துவங்கி, மாலை, 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 11 ஆவணங்களை பயன்படுத்தலாம்,'' என, கலெக்டர் ஹனீஸ்சாப்ரா அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளுக்கும், இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. சேலம் மாவட்டத்தில், சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், தர்மபுரி ஆகிய நான்கு தொகுதிகள் உள்ளன. அவற்றில், ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு சட்டசபை தொகுதிகள், கள்ளக்குறிச்சியிலும், சங்ககிரி, நாமக்கல் தொகுதியிலும், மேட்டூர், தர்மபுரி தொகுதியிலும் அடங்கி உள்ளது. சேலம் தொகுதியில், இடைப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு தொகுதிகள் உள்ளன.
சேலம் மாவட்டத்தில், 13 லட்சத்து, 49,443 ஆண் வாக்காளர்களும், 13 லட்சத்து, 24,177 பெண் வாக்காளர்களும், 202 திருநங்கையர் என மொத்தம், 26 லட்சத்து, 73,822 பேர் உள்ளனர். 11 தொகுதிகளில், 2,993 ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சேலம் தொகுதியில், 14 லட்சத்து, 97,515 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 1,648 ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி பணியில், 14,368 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இவர்கள் தவிர, 277 மண்டல அலுவலர்களும், மைக்ரோ அப்ஸர்வர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்கள் பட்டியலில், 25 பேர் உள்ளதால், இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, மாவட்டம் முழுவதும், 8,000 இயந்திரங்கள் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில போலீஸார், 3,000க்கும் மேற்பட்டோர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஓட்டுப்பதிவு, காலை, 7 மணிக்கு துவங்கி, மாலை, 6 மணிக்கு முடிகிறது. அதன்பின்பும், வாக்காளர்கள் இருந்தால், டோக்கன் வழங்கப்படுகிறது. ஓட்டுப் போடும் வாக்காளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பூத் சிலிப், அடையாள அட்டையை பயன்படுத்தலாம். அவை இல்லாதவர்கள், ரேஷன் கார்டை தவிர்த்து, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை உள்ளிட்ட, 11 ஆவணங்களை பயன்படுத்தலாம்.
ஓட்டுப்பதிவின்போது, நிழல் இல்லாத சாவடிகளில், சாமியானா பந்தல் அமைப்பும், நீண்ட வரிசையில் காத்திருக்காமல், அருகில் உள்ள அறைகளில், வாக்காளர்களை காத்திருக்க செய்து வரிசையாக அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், அனைத்து ஓட்டு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு, கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. அங்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், வீடியோ கண்காணிப்பும் அமைக்கப்பட உள்ளது. 25ம் தேதி, தேர்தல் பார்வையாளர் முன்னிலையில், சரியான முறையில் ஓட்டுகள் பதிவாகி உள்ளதா என்பதை, ஓட்டுச்சாவடி அலுவலர் வழங்கிய ஆவணங்கள் மூலம் சரிபார்க்கப்படுகிறது. மே, 16ம் தேதி காலை, 8 மணிக்கு, 14 டேபிள்கள் அடிப்படையில் ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=961204&Print=1

No comments:

Post a Comment