Pages

Thursday, April 24, 2014

தமிழகத்தில் 73 சதவீத வாக்குப்பதிவு: மகாராஷ்டிராவில் 55 சதவீதம்

தமிழகத்தில் 73 சதவீத வாக்குப்பதிவு: மகாராஷ்டிராவில் 55 சதவீதம்
தமிழகத்தில் 73 சதவீத வாக்குப்பதிவு: மகாராஷ்டிராவில் 55 சதவீதம்
புதுடெல்லி, ஏப். 24-

நாடாளுமன்றத் தேர்தலில் இன்று 11 மாநிலங்கள், புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த வாக்குப்பதிவின்போது சில வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன. இதன் காரணமாக சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில், சாதனை அளவாக 72.8 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக தர்மபுரியிலும், குறைந்தபட்சமாக தென்சென்னையிலும் வாக்குகள் பதிவாகி உள்ளன. தொகுதிவாரியாக வாக்குப்பதிவு சதவீத விவரம் வருமாறு:-

திருவள்ளூர்-74.75, வடசென்னை-64.63, தென்சென்னை-57.86, மத்திய சென்னை-60.9, ஸ்ரீபெரும்புதூர்-61.19, காஞ்சிபுரம்-64.08, அரக்கோணம்-77.02, வேலூர்-72.32, கிருஷ்ணகிரி-77.33, தர்மபுரி-80.99

திருவண்ணாமலை-77.48, ஆரணி-78.66, விழுப்புரம்-76.02, கள்ளக்குறிச்சி-77.23, சேலம்-77.29, நாமக்கல்-79.15, ஈரோடு-75.61, திருப்பூர்-71.26, நீலகிரி-74.3, கோவை-68.94

பொள்ளாச்சி-72.84, திண்டுக்கல்-78.29, கரூர்-79.88, திருச்சி-70.43, பெரம்பலூர்-80.12, கடலூர்-77.6, சிதம்பரம்-79.85, மயிலாடுதுறை-75.4, நாகப்பட்டினம்-76.69, தஞ்சை-75.02

சிவகங்கை-71.47, மதுரை-65.46, தேனி-72.56, விருதுநகர்-72.19, ராமநாதபுரம்-68.84, தூத்துக்குடி-69.12, தென்காசி-74.3, திருநெல்வேலி-66.59, கன்னியாகுமரி-65.15 சதவிகித வாக்குகள் பதிவாகின. புதுச்சேரி தொகுதியில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இடைத்தேர்தல் நடைபெற்ற ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் 63.98 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன.

இன்றைய வாக்குப்பதிவில் அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் (6 தொகுதிகள்) 82 சதவீத வாக்குகள் பதிவாகின. மத்திய பிரதேசத்தில் (10 தொகுதிகள்) 64.04 சதவீதமும், ஜம்மு காஷ்மீரில் (ஒரு தொகுதி) 28 சதவீதமும், மகாராஷ்டிராவில் (19 தொகுதிகள்) 55 சதவீதமும், ஜார்க்கண்டில் (4 தொகுதி) 63 சதவீதமும், ராஜஸ்தானில் (5 தொகுதி) 59.2 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

http://election.maalaimalar.com/2014/04/24212707/73-percent-polling-in-Tamil-Na.html

No comments:

Post a Comment